உலகிலேயே விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடம்.. ஜாக்கிரதையாக இருங்கள்.. மைக்கேல் வாகன் எச்சரிக்கை!

Michael Vaughan

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு மெகா டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான லீக் சுற்றில் முதலில் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்ளும் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், ஜனவரி மாத இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான மெகா டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், சற்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், கிரிக்கெட் உலகில் இரண்டு வலுவான நாடுகள் டெஸ்ட் தொடரில் விளையாடுவது என்பது எப்பொழுதும் அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தக்கூடியது. இதில்,

இங்கிலாந்து அணி சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் போன்று அணுகி வருகிறது. எந்த விதமான கிரிக்கெட்டாக இருந்தாலும், இங்கிலாந்தின் அதிரடி பாணிக்கு உலகெங்கும் இருந்து தனி ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால், டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், அது அவர்களுக்கு கடினமாக இருக்கும். இதனால் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்த்து என்ன முறையில் விளையாடுவார்கள் என்பது போன்ற கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது.

மீண்டும் ஐபிஎல்லில் களமிறங்கும் ரிஷப் பண்ட்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள 5 டெஸ்ட் தொடர்களுக்கு முன்னதாக, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், இந்தியாவின் சுழல்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்தின் பேட்டிங்கை சிதைத்துவிடுவார்கள் என எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் மைக்கேல் வாகன் கூறியதாவது, உலகிலேயே கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடம் இந்தியா.

கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் சிறப்பாக பந்து வீசியதால் அந்த அணி 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. குறிப்பாக ஒரு ஸ்பின்னர் இங்கிலாந்தின் சுமாரான ஷாட்டுகளால் 5 விக்கெட்களை எடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். அதே சூழ்நிலையில், அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் உள்ளிட்ட சிறந்த ஸ்பின்னர்கள் இருப்பதாலும், சூழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் அந்த அணியை டெஸ்ட் தொடரில் எதிர்கொள்ளு இங்கிலாந்து அணியை சிதைத்துவிட்டுவார்கள்.

குறிப்பாக, இந்தியாவில் 3 தரமான ஸ்பின்னர்களை எதிர்கொள்வதால் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதனால், இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி அணுகுமுறையை ஓரம்கட்டி, சற்று ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். சமீபத்தில், இந்தியாவில் நாங்கள் அதிரடியாக விளையாடுவோம் என்று இங்கிலாந்து வீரர்கள் கூறினார்கள். எனவே, இந்த தொடரை பார்ப்பது சிறப்பாக இருக்கும். இருப்பினும், இந்தியாவில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் சேர்ந்தால், இங்கிலாந்து பேட்டி யூனிட் மொத்தமாக அழிக்கப்படலாம் எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்