2024 டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்லும்.! மைக்கேல் வாகன் கணிப்பு..

MichaelVaughan

கடந்த நவம்பர் 19ம் தேதி ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரானது முடிவடைந்தது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடந்து வருகிறது. 23ம் தேதி நடைப்பெற்ற முதல் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக உள்ளார்.

இதற்கிடையில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது கவனமும் டி20 உலக கோப்பைத் தொடர் மீது சென்றுள்ளது. இந்த 20 ஓவர்கள் கொண்ட 9வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைத் தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

எனது அணிக்காக போட்டியை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.! ரின்கு சிங்

அமெரிக்கா ஒரு பெரிய கிரிக்கெட் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். மொத்தமாக 55 போட்டிகளில் உலகின் தலைசிறந்த 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே 18 நாடுகளின் அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2024 ஐசிசி டி20 உலக கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிதான் வெல்லும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கிளப் ப்ரேரி ஃபயர் என்ற எக்ஸ் கணக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் பல கிரிக்கெட் ஆர்வலர்களுடனான உறையாடலின் போது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்