#IPL2022: சென்னை அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 59-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க அணியும், ரோஹித் ஷர்மா தலைமயிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றதால், இன்று சென்னை அணிக்கு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
விளையாடும் வீரர்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, மொயின் அலி, ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராமன்தீப் சிங், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், குமார் கார்த்திகேயா, ரித்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்.