#IPL2022: கடைசி ஓவரில் நடந்த “மேஜிக்” மும்பை அணி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 51-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமன் சஹா – ஷப்மன் கில் களமிறங்கினார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியை போலவே குஜராத் அணியும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அந்தவகையில் முருகன் அஸ்வின் வீசிய பந்தில் அரைசதம் விளாசிய ஷப்மன் கில் 52 ரன்களுக்கும், 55 ரன்கள் அடித்து விருத்திமன் சஹா தனது விக்கெட்டை இழந்தார். இவர்களைதொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் 14 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 24 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
கடைசியாக 6 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை அணி சார்பாக பந்துவீச டேனியல் சாம்ஸ் வந்தார். அதிரடியாக பந்துவீசிய அவர், ராகுல் தேவாதியாவின் விக்கெட்டை வீழ்த்தி, 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை அணியை வெற்றிபெற செய்துள்ளார். இந்த போட்டியின் மூலமாக மும்பை அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025