MI vs SRH: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs SRH போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு.
ஐபிஎல் 2023 தொடரின் லீக் சுற்று படிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிளேஆப்-க்கு செல்லும் நான்காவது அணி யார் என்பது இன்று தெளிவாகிவிடும். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளேஆப்சில் இருந்து வெளியேறிய நிலையில் இன்று மும்பை அணியின் பிளேஆப் வாய்ப்பு இப்போட்டியின் முடிவைப் பொறுத்து அமையும். குஜராத், சென்னை, மற்றும் லக்னோ ஆகிய 3 அணிகள் பிளேஆப்-க்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மும்பை அதிக ரன்ரேட் விகிதத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப்-க்கு செல்லமுடியும், இதனால் இன்றைய போட்டியில் வாணவேடிக்கையை எதிர்பார்க்கலாம். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஹைதராபாத் அணி: மயங்க் அகர்வால், விவ்ராந்த் சர்மா, ஐடன் மார்க்ரம்(C), ஹென்ரிச் கிளாசென்(W), ஹாரி புரூக், நிதிஷ் ரெட்டி, க்ளென் பிலிப்ஸ், சன்வீர் சிங், மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்
மும்பை அணி: ரோஹித் ஷர்மா(C), இஷான் கிஷன்(W), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்