MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார்.

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30 மணிக்கும் மோதுகிறது. முதலில், லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார்.
மும்பை மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகளும் முறையே, அடுத்தடுத்த 5 , 6-வது இடங்களில் இருப்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது இரு அணிகளுக்கான பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், லக்னோ அணி ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது. அதாவது அணியில் மயங்க் யாதவ் திரும்பிவிட்டார். ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. மிட்செல் சாண்ட்னருக்குப் பதிலாக கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உடம்பு சரியில்லை என்பதால், கோர்பின் போஷ் மும்பை அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமாகிறார்.
மும்பை அணி:
கேப்டன் ஹார்டிக் பாண்ட்யா தலைமையிலான அணியில், ரியான் ரிக்கெல்டன் , ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் தீர், கார்பின் போஷ், டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், கர்ண் சர்மா ஆகியோர் உள்ளனர்.
லக்னோ அணி:
கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான அணியில், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், ஆயுஷ் படோனி, திக்வேஷ் சிங் ரதி, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் ஆகியோர் உள்ளனர்.