MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!
மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 16.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இம்பேக்ட் பிளேயராக ரோஹித் சர்மா வெளியில் அமரவைக்கப்பட்டார். அஸ்வனி குமார் எனும் வீரர் இந்த போட்டியில் மும்பை அணியில் அறிமுகம் செய்யப்பட்டார்.
முதல் இன்னிங்க்ஸை கொல்கத்தா தொடங்கியது முதலே மும்பை வீரர்களின் பந்துவீச்சை பவர் பிளேயில் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. தொடக்க வீரர்களான குயின்டன் டி காக் 1 ரன்னிலும், சுனில் நரைன் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
கேப்டன் அஜிங்க்யா ரஹானே 11 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். ரின்கு சிங் 17 ரன்னிலும், மணீஷ் பாண்டே (இம்பேக்ட் பிளேயர்) 19 ரன்னிலும் அவுட் ஆகினர். ஆண்ட்ரே ரசல் 5 ரன்னிலும், ஹர்ஷித் ராணா 4 ரன்னிலும் அவுட் ஆகினர். ரமன்தீப் சிங் 22 ரன் எடுத்து அவுட் ஆக இறுதியில் 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து கொல்கத்தா அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது . 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.
இந்த போட்டியில் மிரள வைத்தது மும்பை அணியின் பந்துவீச்சு தான். அதிலும் இந்த போட்டியில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிக்கு அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வனி குமார் 3 ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி மிரட்டியுள்ளார். தீபக் சாகர் 2 விக்கெட்டையும், ஹர்திக் பாண்டியா, விக்னேஷ் புதுர், டிரெண்ட் போல்ட் , மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.