34-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் 2021-ன் 14 சீசனின் இன்றைய 34-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
மும்பை மற்றும் சென்னை போட்டியில் முழு உடல் தகுதி இல்லாமல், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அப்போட்டியில் போலார்டு கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இன்று நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா முழு உடல் தகுதியுடன் மீண்டும் களமிறங்கினார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் சேர்ந்து 6 ஓவரில் 56 ரன்களை சேர்ந்தனர். இதன்பின் 30 பந்துகளில் 33 அடித்த ரோஹித் சர்மா, சுனில் நரனே பந்தில் விக்கெட்டை இழந்தார்.
இவரைத்தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் களமிறங்கினார். ஒருபக்கம் மும்பை அணி விக்கெட் சரிய, மறுபக்கம் டி காக் நிதானமாக விளையாடி அவரது அரை சத்தத்தை அடித்து, 55 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கேட்சி கொடுத்து அவுட்டானார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இஷான் கிஷன் மீண்டும் ஒருமுறை சொற்ப ரன்களில் வெளியேறினார். க்ருனால் மற்றும் போலார்டு பாட்னர்ஷிப் சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. போலார்டு போட்டியின் இறுதி ஓவரில் 21 ரன்களில் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாக, க்ருனால் பாண்டியா 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்கம் சிறப்பாக அமைந்த நிலையில், அதன்பின் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்து, ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால், 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற முனைப்புடன் கொல்கத்தா களமிறங்கியுள்ளது. கொல்கத்தா அணி சார்பாக பிரசித் கிருஷ்ணா, லோக்கி பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…