MI VS CSK: சரிவில் இருந்து மீண்ட மும்பை அணி! பாண்டியா அதிரடி! மும்பை ரன் குவிப்பு!
- ஒரு கட்டத்தில் 150 ரன்களை எட்டுமா என்று இருந்த மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டது பாண்டியா 170 ரன்கள் குவிக்க வைத்துள்ளார்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்கம் முதலே சென்னை பந்துவீச்சாளர்களை சந்திக்க முடியாமல் திணறிய மும்பை இந்தியன்ஸ் அணிகள் பெரிதாக ரன் எடுக்க முடியவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் 4 ரன்னிலும் 14 ரன்களிலும் வெளியேறினர்.
அதன் பின்னர் வந்த சூரியகுமார் ஓரளவுக்கு நன்றாக ஆடி 46 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதற்கு பிறகு வந்த யுவராஜ் சிங் 4 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த குருநால் பாண்டிய மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அபாரமாக ஆடிநர். க்ருனால் 42 ரன்களும் ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்களும் விளாசினர். இறுதியாக கடைசி 2 ஓவர்களில் 46 ரன்கள் விளாச இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 170 ரன்கள் குவித்துள்ளது.