#IPL2022: பவர்கட்-ஆல் திரும்பிய போட்டி.. மும்பை அணிக்கு 98 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் எடுத்தது. 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – கான்வே களமிறங்கினார்கள்.
இந்த ஆட்டம் தொடங்கும் முன்னதாக மைதானத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள காரணமாக DRS முறை பார்க்க முடியாது என்று அம்பயர்கள் அறிவித்தனர். அந்தவகையில் டெவன் கான்வே, 2-ம் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். அந்த பந்து, லெக் சைடில் மிஸ் ஆவதாக கூறப்படுகிறது. DRS இல்லை என்று அம்பயர்கள் கூறியதால் வேறு வழி இல்லாமல் கான்வே வெளியேறினார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி டக் அவுட் ஆக, பின்னர் ராபின் உத்தப்பாவும் LBW முறையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ருதுராஜ் 7 ரன்கள் எடுத்தும், அம்பதி ராயுடு 10 ரன்கள் அடித்து தங்களின் விக்கெட்டை இழக்க, பவர் பிளே ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்தது. பின்னர் களமிறங்கிய துபே 10 ரன்கள் எடுத்தும், பிராவோ 12 ரன்கள் எடுத்தும், சமர்ஜித் சிங் 2 ரன்கள் எடுத்து வெளியேற, மறுமுனையில் ஆடிவந்த தோனி கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக 16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் எடுத்தது. 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது மும்பை அணி களமிறங்கியுள்ளது.