IPL2020 Finals: ஐந்தாம் முறையாக கோப்பையை கைப்பற்றுமா மும்பை?? 157 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 156 ரன்கள் அடித்துள்ளது.
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல, இரண்டாம் குவாலிபையரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் – ஷிகர் தவான் களமிறங்கினர். மும்பை அணியில் முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். முதல் பந்திலே மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட் கீப்பர் குயின்டன் டி கோக்கிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவரையடுத்து களமிறங்கிய ரஹானே 2 ரன்களில் வெளியேற, தவானுடன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். இருவரின் கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 15 ரன்களில் தவான் வெளியேற, பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த், கூட்டணி அமைத்து சிறப்பாக ஆடிவந்தனர். 56 ரன்களில் ரிஷப் பந்த் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய அக்சர் பட்டேல் 9 ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் மும்பை அணியில் ட்ரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டும், குல்டர்-நைல் 2 விக்கெட்களும், ஜெயண்ட் யாதவ் 1 விக்கெட்டை எடுத்தார். தற்பொழுது 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கவுள்ளது.