ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது, பெங்களூர் அணி.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஃபாப் டு ப்ளஸிஸ் – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள்.
நிதானமான தொடக்கத்தை தொடங்கிய டு ப்ளஸிஸ், 16 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, அனுஜ் ராவத்துடன் இணைந்து அதிரடியாக ஆடி வந்தார். இருவரின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மளமளவென உயர, அனுஜ் ராவத் அரைசதம் அடித்தார். 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அனுஜ் ராவத் தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைதொடர்ந்து 48 ரன்கள் அடித்து விராட் கோலி தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் – தினேஷ் கார்த்திக் கூட்டணி அணியை வெற்றிபெற வைத்துள்ளது. இறுதியாக பெங்களூர் அணி, 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை அணி உள்ளது, குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…