ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினார்கள்.
இதில் 2 ரன்கள் மட்டுமே அடித்து ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 4 ரன்கள் எடுத்தும், ராமந்தீப் 12 ரன்கள் எடுத்தும், டிம் டேவிட் 13 ரன்கள் எடுத்து தங்களின் விக்கெட்டை இழந்தனர். மறுமுனையில் அரைசதம் விளாசிய இஷான் கிஷன் 51 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் களமிறங்கிய பொல்லார்டு 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக 17.3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்கள் எடுத்து, 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்களும், ரசல் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…