ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 5 ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல, இரண்டாம் குவாலிபையரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் – ஷிகர் தவான் களமிறங்கினர். முதலில் ஆடிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது.
157 ரன்கள் அடித்தால் கோப்பை நிச்சியம் என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா – டி காக் களமிறங்கினார்கள். தோட்டாக்கள் முதலே இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். அதன்பின் 20 ரன்கள் அடித்து டி காக் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 19 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் சிறப்பாக ஆட, அணியில் ஸ்கொர் உயர்ந்தது. அதன்பின் ரோஹித் ஷர்மா அரைசதம் விளாசிய நிலையில், 68 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மத்தியில் இருக்கும் இஷான் கிஷன் இறுதிவரை காலத்தில் இருக்க, பின்னர் களமிறங்கிய பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக மும்பை, 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து, வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதான் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி, 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே அணி என்ற சாதனையையும் படைத்தது. அதுமட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை விளையாடிய இறுதி போட்டிகள் அனைத்திலும் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியுள்ளது. அதிலும், 2018 ஆம் ஆண்டில் நடந்த இறுதி போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமையிலான புனே அணியுடன் மோதியது. ஆனால் இம்முறை நடந்த இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதியது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…