இறுதிப்போட்டிக்குள் முதலாவதாக நுழைந்தக மும்பை.. 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
13 ஆம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் அடித்தது.
201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வீ ஷா – தவான் களமிறங்கினார்கள். முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசிய நிலையில், முதல் பந்துலே ப்ரித்வி ஷா வெளியேறினார். அதனைதொடர்ந்து 4 ஆம் பந்தில் ரஹானே வெளியேற, 1 ஓவர் முடிவில் ஒரு றன் கூட எடுக்காமல் 2 விக்கெட்டை இழந்தது.
அதேபோல 1.2 ஆம் ஓவரில் தவான் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களில் வெளியேற, அதன்பின் களமிறங்கிய ஸ்டோனிஸ் சிறப்பாக ஆடிவந்தார். அவருடன் அக்ஸர் பட்டேல் இணைய, இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். 65 ரன்கள் குவித்து ஸ்டோனிஸ் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய டேவிட் சாம்ஸ், ஒரு றன் கூட எடுக்காமல் வெளியேறினார்.
இறுதியாக அக்ஸர் பட்டேல் 42 ரன்கள் குவித்து வெளியேற, டெல்லி சி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்து, 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம் இறுதி போட்டிக்கு மும்பை அணி முதலாவதாக நுழைந்தது. மேலும், நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ஹைதரபாத் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் களம்காணும். அதில் வெற்றிபெறும் அணி, மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.