தரவரிசையை வெளியிட்ட ஐசிசி ..! வலுவான இடத்தில் விராட்,ரோகித்,பும்ரா
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.
- ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங்,பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் பட்டியல்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங்,பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் பட்டியல்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் :
1) விராட் கோலி (இந்தியா) – 886 புள்ளிகள்
2)ரோகித் சர்மா (இந்தியா) – 868 புள்ளிகள்
3)பாபர் அசாம் (பாகிஸ்தான் ) – 829 புள்ளிகள்
4)டூப்ளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா)- 815 புள்ளிகள்
5)டெய்லர் (நியூசிலாந்து )- 810 புள்ளிகள்
6)வார்னர் (ஆஸ்திரேலியா)- 796 புள்ளிகள்
7)கென் வில்லியம்ஸ் (நியூசிலாந்து ) – 789 புள்ளிகள்
8)ரூட்(இங்கிலாந்து ) – 776 புள்ளிகள்
9)டி காக் (தென் ஆப்பிரிக்கா) – 773 புள்ளிகள்
10)ஃபின்ச் (ஆஸ்திரேலியா) – 769 புள்ளிகள்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் :
1)பும்ரா (இந்தியா)- 764 புள்ளிகள்
2)போல்ட் (நியூசிலாந்து ) – 737 புள்ளிகள்
3)முஜீப் (ஆப்கானிஸ்தான் )- 701 புள்ளிகள்
4)ரபடா (தென் ஆப்பிரிக்கா)- 684 புள்ளிகள்
5)கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)- 673 புள்ளிகள்
6)வோக்ஸ் (இங்கிலாந்து ) – 664 புள்ளிகள்
7)அமீர் (பாகிஸ்தான் ) – 656 புள்ளிகள்
8)ஹென்றி (நியூசிலாந்து )- 653 புள்ளிகள்
9)பெர்குசன் (நியூசிலாந்து ) – 648 புள்ளிகள்
10)ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)- 645 புள்ளிகள்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியல்:
1)பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)-304 புள்ளிகள்
2)முகமது நபி (ஆப்கானிஸ்தான்)-301 புள்ளிகள்
3)ஐமத் வாசிம் (பாகிஸ்தான்) – 278 புள்ளிகள்
4)கிரிஷ் வோக்ஸ் (இங்கிலாந்து )-259 புள்ளிகள்
5)ராஷித் கான் (ஆப்கானிஸ்தான் )-253 புள்ளிகள்
6)மிட்செல் சன்ட்னர் (நியூசிலாந்து)-246 புள்ளிகள்
7)ஆண்டிலே பெலுக்குவியா (தென் ஆப்பிரிக்கா)-241 புள்ளிகள்
8)காலின் டி-கிராண்ட் ஹோம் (நியூசிலாந்து) -240 புள்ளிகள்
9)சிகன்டர் ராசா (ஜிம்பாவே ) -234 புள்ளிகள்
10)ரவீந்திர ஜடேஜா (இந்தியா)-233 புள்ளிகள்