இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம்.!

Default Image

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் விக்டோரியா அரசாங்கமும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2007இல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டி-20 உலகக்கோப்பையில் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தில் மைதானம் முழுதும் 90,293 ரசிகர்கள் வந்து பங்கேற்றனர், இதனையடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் விக்டோரியா அரசாங்கம் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

விக்டோரியா அரசாங்கம், இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் கோரிக்கை வைத்துள்ளோம், அவர்கள் ஐசிசி யிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து இதனை நடத்த முயற்சிப்பார்கள் என்று நம்புகிறோம் என கூறியுள்ளதாக தகவல் வெளியானது.

2023 முதல் 2027 வரையிலான இந்தியாவின் போட்டி அட்டவணையில் பாகிஸ்தானுடன் எந்தவித கிரிக்கெட் தொடரும் அமைக்கப்படவில்லை, வரும் காலங்களில் அதாவது அடுத்த ஆண்டு, பாகிஸ்தானில் ஆசியக்கோப்பையும், இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பையும் நடக்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்