ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் மயங்க் யாதவ் ? இது தான் காரணம் !

Published by
அகில் R

Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளரான 21 வயதான இளம் வீரர் மயங்க் யாதவ் மொத்தமாக இந்த ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் பந்து வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவரது பந்து வீச்சில் சிறப்பான அம்சம் என்வென்றால் மணிக்கு 156 கீ.மி வேகத்தில் பந்தை வீசுவார் அதிலும் ஒரு ஓவரில் 6 பந்துகளிலும் வித்தியாசமான லைன்னில் பந்தை வீசுவார். இவரது மிகசிறந்த பேட்மேன்கள் கூட தடுமாறி இருக்கின்றனர்.

இவர் அறிமுகமான முதல் போட்டியிலே சிறப்பாக பந்து வீசி அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும், தொடர்ந்து அடுத்த போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் 2 போட்டிகளில் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். அதன் பிறகு அடி வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற மும்பையுடனான போட்டியில் இவர் மீண்டும்  களமிறங்கினார்.

அந்த போட்டியிலும் 3 ஓவர்கள் முழுவதுமாக பந்து வீசிய இவர் 4-ஓவரில் முதல் பந்தை வீசிய போது மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார். இதை பற்றி லக்னோ அணி தரப்பில் கூறுவது என்னவென்றால், மயங்க் யாதவுக்கு அடிவயிற்றில் சதை கிழுவு ஏற்பட்டிருக்கலாம், இதனால் அவர் எஞ்சியுள்ள போட்டியில் விளையாடா முடியாமல் போகலாம், மேலும் ஒரு வேளை லக்னோ அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் கூட நாங்கள் அவரை விளையாட வைக்கலாம்.

ஆனால், அவரது உடலுக்கு அது நல்லதில்லை என லக்னோ அணி தரப்பில் கூறியுள்ளனர்.  அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேக பந்து வீச்சாளருக்கு தரும் சிறப்பு ஒப்பந்தம் வழங்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு வேளை அவருக்கு அந்த ஒப்பந்தம் கிடைத்தால் காயத்துக்கான சிகிச்சை பொறுப்பை தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழு பொறுப்பேற்று ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
அகில் R

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

15 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

16 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

16 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

17 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

17 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

17 hours ago