விமானத்தில் குடித்த தண்ணீர்.? மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி.! போலீசில் புகார்.! 

Mayank Agarwal in agartala hospital

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கர்நாடக மாநில அணியின் கேப்டனாகவும் உள்ள மயங்க் அகர்வால் தற்போது திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

அங்கு , அவர் ஏறிய இண்டிகோ விமானத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் பருகியதாக தெரிகிறது. உடனடியாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வாயில் புண் ஏற்பட்டுள்ளது. மயங்க் அகர்வால் உடல் நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்து விமானம் மீண்டும் அகர்டலாவற்கு திருப்பப்பட்டது.

மயங்க் அகர்வால் அகர்டலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதை அடுத்து, மயங்க் அகர்வால் உதவியாளர் இந்த விஷயத்தை , முழுதாக விசாரிக்க அகர்தலா காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார் என மேற்கு திரிபுரா காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் தனியார் செய்தி நிறுவனத்திடம் தகவல் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், விமானத்தில் அமர்ந்த போது எதிரே இருந்த ஒரு பையில் தண்ணீர் இருந்ததாகவும், அதனை மயங்க் அகர்வால் குடித்தார் என்றும், அதன் மூலம் திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவரது உதவியாளர் கூறியதாகவும், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து, மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் கிரண் கிட்டே கூறுகையில், மயங்க் அகர்வால் புகாரை போலீசார் ஏற்றுக் கொண்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை நாங்கள் தீவிரமாக விசாரிப்போம். அவரது மேலாளரின் கூற்றுப்படி அவர் நாளை பெங்களூரூ செல்ல உள்ளார். இதற்கிடையில் அகர்தலாவில் இன்று சிறந்த சிகிச்சையை வழங்குவோம் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்