பெங்களூரு அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி விளையாடியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய 58 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 ரன்கள் எடுத்த நிலையில், இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் படேல் 3, சாஹல், ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, தேவதூத் படிக்கல் இருவரும் களமிறங்க சிறப்பான ஆட்டத்தை இருவரும் கொடுத்தனர். நிதானமாக விளையாடி கோலி 25 , படிக்கல் 22 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து கூட்டணி அமைத்த ஸ்ரீகர் பாரத் , மேக்ஸ்வெல் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஸ்ரீகர் பாரத் அரைசதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களத்தில் நின்ற மேக்ஸ்வெல் 17-வது ஓவரில் 22 ரன்கள் எடுத்தார். அதில், 3 பவுண்டரி, 1 சிக்ஸர் , 4 ரன்கள் அடங்கும். இறுதியாக பெங்களூரு அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை களத்தில் மேக்ஸ்வெல் 50* ரன்களுடன் நின்றார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…