மேக்ஸ்வெல் அரைசதம் விளாசல்.., பஞ்சாபிற்கு 165 ரன்கள் இலக்கு..!
பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியானது, ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய கோலி 25 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்த இறங்கிய டேனியல் கிறிஸ்டியன் டக் அவுட் ஆனார். அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக விளையாடிய படிக்கல் 40 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இறங்கிய மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடி வந்த ஏபி டிவில்லியர்ஸ் 23 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
களம் இறங்கியது முதல் அதிரடி காட்டி வந்த மேக்ஸ்வெல் அரைசதம் விளாசி கடைசிவரை 57 ரன் எடுத்துவிக்கெட்டை இழந்தார். அதில், 4 சிக்ஸர் , 2 பவுண்டரி அடங்கும். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் ஷமி, மோயிஸ் ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டை பறித்தனர். ஷமி கடைசி ஓவரில் 3 விக்கெட்டை பறித்தார்.