2022இல் அதிகபட்ச ரன்கள்! சூர்யகுமார் யாதவை முந்திய ஷ்ரேயஸ் ஐயர்.!

Default Image

2022 ஆம் ஆண்டின் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சூர்யகுமாரை முந்தினார் ஷர்யாஸ் ஐயர்.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் நேற்று 82 ரன்களை அடித்ததன் மூலம் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிற்காக அனைத்து வித போட்டிகளிலும் சேர்த்து 1489 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார்.

இதன் மூலம் 1424 ரன்கள்(43 இன்னிங்ஸ்) எடுத்து இதுவரை முதலிடத்திலிருந்த சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி ஷ்ரேயஸ் ஐயர் முன்னேறியுள்ளார். 38 இன்னிங்சில் விளையாடிய ஷ்ரேயஸ் 1489 ரன்கள் குவித்திருக்கிறார். அதிகபட்ச ஸ்கோராக தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ராஞ்சியில் 113*(ஒருநாள் போட்டி) ரன்கள் குவித்தார்.

அடுத்தடுத்த இடங்கள் முறையே 3-வது இடத்தில் விராட் கோலி 1304 ரன்கள் (39 இன்னிங்ஸ்), 4-வது இடத்தில் ரிஷப் பந்த் 1278 ரன்கள் (41 இன்னிங்ஸ்), 5-வது இடத்தில் ரோஹித் சர்மா 995 ரன்கள் (40 இன்னிங்ஸ்) ஆகியோரும் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்