இன்றைய முதல் போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதி வருகிறது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன ,குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். நான்காவது ஓவரில் கேப்டன் திமுத் கருணாரத்ன 10 ரன்களுடன் வெளியேறினர்.பின்னர் அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினர்.
நிதானமாக விளையாடிய குசல் பெரேரா 18 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் களமிறங்கிய குசால் மெண்டிஸ் 3 , அவிஷ்கா 20 ரன்களுடன் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இலங்கை 12 ஓவரில் 4 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது .அப்போது மத்தியில் இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் , லஹிரு திரிமன்னே இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.இருவரின் அதிரடி ஆட்டத்தால் இருவருமே அரைசதத்தை நிறைவு செய்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் அடித்த சில ஓவரில் தனது சதத்தையும் நிறைவு செய்தார். இப்போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் 113 , லஹிரு திரிமன்னே 53 ரன்களுடன் வெளியேறியனர்.
இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் பும்ரா 3 விக்கெட்டை பறித்தார்.265 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…