IPL2024: மழை காரணமாக இன்றைய போட்டி கைவிடப்பட்டது..!

IPL2024: மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணி மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் மோத இருந்தது. இந்த போட்டி டாஸ் தூங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் மழை நின்ற பின் டாஸ் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் மழைத்தொடர்ந்து பெய்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இன்றைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாளை மறுநாள் முதல் தகுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிப்பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். முதல் தகுதி போட்டியில் தோல்வி அடைந்த அணியும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியும் இரண்டாவது தகுதி போட்டியில் மோதும்.
இரண்டாவது தகுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணியும், முதல் தொகுதி போட்டியில் வெற்றி பெற்ற அணியும் வருகின்ற 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025