ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெல்லி – ராஜஸ்தான் அணிகள், இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் டெல்லி அணி 11 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் அணி, தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த போட்டியில் களமிறங்கியது. இதில் ராஜஸ்தான் அணி, 217 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்த தொடரில் ராஜஸ்தான் அணி பயங்கர பார்மில் இருக்கின்றது.
இந்த போட்டியில் காயம் காரணமாக பெண் ஸ்டோக்ஸ் வெளியேறினார். மேலும், ஆர்ச்சரும் இல்லாதால், பந்துவீச்சிலும் கடினமான இருக்கும். அந்த இடத்தை கிறிஸ் மோரிஸ் ஆக்கிரமித்துள்ளார். இதனால் அடுத்து வரும் போட்டிகளில் ராஜஸ்தான் அணி பயங்கரமாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேப்டன் சஞ்சு சாம்சன், கடந்த போட்டியில் 119 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் அவரின் ஆட்டம், அணிக்கு கூடுதல் பலம்.
டெல்லி கேபிட்டல்ஸ்:
டெல்லி அணியை பொறுத்தளவில் சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பயங்கரமாக ஆடியது. இதில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவருக்கு பதில் ரபாடா களமிறங்க வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தை பொறுத்தளவில் பேட்டிங்க்கு சாதகமாக உள்ளதால் அதிகளவில் ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது.
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…