#IPL2022: பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெறுமா ராஜஸ்தான்? சென்னை அணியுடன் இன்று மோதல்!

Default Image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியது. அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள 68-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் இந்த போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 15 முறையும், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 13 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது. . அதேபோல ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் வெற்றிபெற்று 3-ம் இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு கடைசி போட்டி என்பதால் இந்த போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் 3-வது அணியாகும். இதில் தோல்வியை சந்தித்தால், அடுத்த நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்திக்க வேண்டும். இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது.

எதிர்பார்க்கப்படும் XI:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஓபேட் மெக்காய்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சிவம் துபே, அம்பதி ராயுடு, தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், பிரசாந்த் சோலங்கி, மதீஷா பத்திரனா, முகேஷ் சவுத்ரி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்