#IPL2022: பிளே ஆப்ஸ் கனவை வெல்லுமா பெங்களூர்? குஜராத் அணியுடன் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 13 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் குஜராத் அணி 10 போட்டிகளில் வெற்றிபெற்று பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது. அதேபோல பெங்களூர் அணி, 7 போட்டிகளில் வெற்றிபெற்று பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. குஜராத் அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், பெங்களூர் அணிக்கு பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைவதற்கு இதுவே கடைசி போட்டியாகும்.
இந்த போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவ்வாறு வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்திற்கு முன்னேறும். மேலும் மும்பை அணிக்கு எதிரான 69-வது போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்தால் பெங்களூர் அணி பிளே ஆப்ஸ் கனவை காண அருமையான வாய்ப்பாக கருதப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி, ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தேவாதியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், முகமது ஷமி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி, ஃபாப் டூ பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.