#IPL2022: 5 தொடர் தோல்விகள்.. வெற்றிபெறுமா ஹைதராபாத்? மும்பை அணியுடன் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 65-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள 65-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 17 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும், மும்பை அணி 9 போட்டிகளில் வெற்றிபெற்றது. மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி, 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
அதேபோல ஹைதராபாத் அணி, 12 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்த ஹைதராபாத் அணி, அடுத்த நடைபெறவுள்ள 2 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் 5-ம் இடம் வரை முன்னேற வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராமன்தீப் சிங், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், குமார் கார்த்திகேயா, ரித்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக்.