#IPL2022: 4-ம் இடத்திற்கு முன்னேற டெல்லிக்கு வாய்ப்பு.. பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 64-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கவுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் 64-வது போட்டியில் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் டெல்லி அணி 15 வெற்றிகளும், பஞ்சாப் அணி 14 வெற்றிகள் பெற்றுள்ளது. மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 12 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் டெல்லி அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. அதேபோல பஞ்சாப் அணி, 6 வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் டெல்லி அணி 4-ம் இடத்திற்கு முன்னேற அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
டெல்லி கேபிட்டல்ஸ்:
ஸ்ரீகர் பாரத், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் சிங், கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே.
பஞ்சாப் கிங்ஸ்:
ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான், பானுகா ராஜ்பக்சா, லியாம் லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்)., ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அஷ்தீப் சிங்.