#IPL2022: இன்று பஞ்சாப் – பெங்களூர் அணிகள் மோதல்.. வெற்றிபெறப்போவது யார்?

Default Image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 60-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. 

ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதி கட்டத்தை கடந்துள்ள நிலையில், தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 60-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 13 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றிபெற்று 4-ம் இடத்தில் உள்ளது. அதேபோல பஞ்சாப் அணி, 11 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. இந்த போட்டி, பஞ்சாப் அணியின் பிளே ஆப்ஸ் வாய்ப்பை தீர்மானிப்பதால், அதனை கருத்தில் கொண்டு இன்று சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கிறது.

எதிர்பார்க்கப்படும் XI:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி, ஃபாப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

பஞ்சாப் கிங்ஸ்:

ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nainar Nagendran BJP
BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva