#IPL2022: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை.. பெங்களூர் அணியுடன் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களூர் அணி, இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 19 போட்டிகளிலும், பெங்களூர் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி, 10 போட்டிகளில் விளையாடிய நிலையில், 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.
அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ளது. தற்பொழுது சென்னை அணி, அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற இன்று நடைபெறும் போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முன்னேறவும் அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியை வீழ்த்திய சென்னை அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது, குறிப்பிடத்தக்கது. அதேபோலவே இன்றைய போட்டியில் விளையாடும் என்று அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், டுவைன் பிரிட்டோரியஸ், சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ஃபாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, மஹிபால் லோம்ரோர், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்