#IPL2022: புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கான வாய்ப்பு.. கைப்பற்றுமா பெங்களூர் அணி?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 36-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 8 போட்டிகளும், ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
அதேபோல நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. அதேபோல ஹைதராபாத் அணி, 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை பெங்களூர் அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாத நிலையில், நடப்பாண்டு தொடரில் ஃபாப் தலைமையிலான அணி, கைப்பற்றும் நோக்குடன் அதிரடியாக விளையாடி வருகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
அனுஜ் ராவத், ஃபாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.