#IPL2022: முதலிடத்தை தக்கவைக்குமா குஜராத்? கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்!

Default Image

இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 35-வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் இந்த போட்டி இன்று பகல் 3:30 மணிக்கு தொடங்கவுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடியது. அதில் 3 வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. அதேபோல அதிரடி பார்மில் உள்ள குஜராத் அணி, 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் பெற்று ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

எதிர்பார்க்கபடும் வீரர்கள்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

வெங்கடேஷ் ஐயர், ஆரன் பின்ச், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸல், ஷெல்டன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), சுனில் நரேன், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ்:

விருத்திமன் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தேவாதியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது ஷமி ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்