ஐபிஎல் தொடரில் 34 ஆம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று பகல் – இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. தற்பொழுது நடக்கும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி டெல்லி அணி, புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் முதல் இடத்திற்கு வரும்.
ஆனால் 6 ஆம் இடத்தில் உள்ள சென்னை அணி, அடுத்து நடக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு முன் நடந்த போட்டியில் சாம் கரணை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். மேலும், இன்றைய போட்டியில் டு ப்ளஸ்ஸிஸ்க்கு ஓய்வளித்து அவருக்கு பதில் இம்ரான் தாஹிரை களமிறக்க வாய்ப்புள்ளது.
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…