ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிய நிலையில், இதில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 222 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பட்லர் 116 ரன்கள் எடுத்து அசத்தினார்.
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – வார்னர் களமிறங்கினார்கள். அதிரடியாக ஆடத்தொடங்கிய வார்னர் 28 ரன்கள் எடுத்து தந்து விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய சர்பராஸ் கான் 1 ரன் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக ஆட, தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த ப்ரித்வி ஷா 37 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மத்தியில் இருந்த ரிஷப் பந்த் 44 ரன்கள் அடித்து வெளியேற, பின்னர் களமிறங்கிய லலித் யாதவ் 37 ரன்கள் எடுத்தும், அக்ஸர் படேல் 1 ரன் அடித்தும், ஷர்துல் தாகூர் 10 ரன்கள் அடித்து தங்களின் விக்கெட்டை இழந்தார்கள். 6 பந்துகளுக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவல் களத்தில் இருந்தார். தொடர்ந்து 3 சிக்சர்கள் அடித்து ராஜஸ்தான் அணியை அவர் பயங்காட்டினார். இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…