#MIvCSK: ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கட்ட போட்டி.. வெற்றிபெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33-வது போட்டியில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஐபிஎல் ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட , ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 19 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 6 போட்டிகளில் விளையாடியது. அதில் சென்னை அணி 1 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்திலும், மும்பை அணி ஒரு வெற்றிகூட பெறாமல் இறுதி இடத்தில் உள்ளது.
இவ்விரு அணிகள், கடந்த ஐபிஎல் தொடரில் டேபிள் டாப்-க்கு போட்டி போடுவார்கள். ஆனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடர்களில் இந்த அணிகள் பின்னடைவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சென்னை அணியின் தீபக் சஹர் இல்லாதது, பெரிய பின்னடையாக அமைவது, குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்க்கப்படும் XI:
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திவால்ட் ப்ரேவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கைரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனத்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, சிவம் துபே, அம்பதி ராயுடு, தோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), டுவைன் பிராவோ, டிவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025