ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 31-வது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஃபாப் டு பிளெஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 6 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 2 தோல்வி என சமமாக உள்ளது. ஆனால் புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 2-ம் இடத்திலும், பெங்களூர் அணி 3-ம் இடத்தில் உள்ளது. இரு அணியும் சமமான பலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டி சிறப்பாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படானி, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ஃபாப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…