SLvIND : 3-வது போட்டி …கேப்டனாகும் கில்? அணியை மொத்தமாக மாற்றும் கம்பீர்? வெளியான தகவல்!!

Gill-Gambhir-Rohit

SLvIND : இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது, இந்த சுற்றுப் பயணத்தில் 3டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் விளையாடி வருகிறது. அதன்படி முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி அசத்தி இருந்தது.

ஆனால், அப்போதும் இந்திய அணி பல சர்ச்சைகளைச் சந்தித்தது என்றே கூறலாம். முக்கியமாக அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கும் ஸுப்மன் கில்லை பற்றியே பல தரப்பினர்களிடம் முரண்பாடான கருத்துக்களை அவர் எதிர்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இலங்கை மோதிய போது, எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டியை ட்ரா செய்து அசத்தி இருப்பார்கள் இலங்கை அணி வீரர்கள். அதன்பிறகு நடைபெற்ற 2-வது போட்டியிலும் 240 ரன்கள் அடிக்க முடியாமல் இந்திய அணி இலங்கை அணியின் பந்து வீச்சுக்குத் திணறியது.

இந்த தோல்வியின் எதிரொலியாக ரசிகர்கள் இந்திய அணியிடம், தற்போது விளையாடும் அணியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்கள். மேலும், நெட்டிசன்கள் பலரும் இந்திய அணியைக் கலாய்க்கவும் தொடங்கினார்கள். இதன் காரணமாக இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் புதிதாக முடிவு எடுத்துள்ளதாக சில தகவல் பரவி வருகிறது.

அந்த தகவல் என்னவென்றால், இந்திய அணி இன்று விளையாடவிருக்கும் கடைசி மற்றும் 3-வது போட்டியில் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப் போவதாகவும் அவருக்குப் பதிலாக தற்போது துணை கேப்டனாக இருக்கும் கில் இந்திய அணியை கேப்டனாக தலைமை தாங்குவார் என ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும், இந்த கடைசி போட்டியில் ரோஹித் சர்மா மட்டுமல்லாது அணியில் மேற்கொண்டு சில மாற்றங்களைக் கவுதம் கம்பீர் செய்யப் போவதாகவும் தகவல் தெரிகிறது. ஒருவேளை இந்தியா அணி இன்று விளையாடும் போட்டியை டிரா செய்தாலோ அல்லது தோல்வியைச் சந்தித்தாலோ இந்த ஒருநாள் தொடரை இழந்து விடுவார்கள்.

அப்படி இந்தியா அணி ஒருவேளை இந்த தொடரை இலக்க நேர்ந்தால் புதிய தலைமை பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இது ஒரு முனையிலிருந்தாலும் கம்பீருக்குத் தோல்விகள் பிடிக்காது என்பதாலும் இன்று நடக்கும் இது போன்ற அதிரடி மாற்றங்கள் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்று மதியம் 2.30 மணிக்குத் தொடங்கும் இந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகி உள்ளதால் தடுமாற்றம் அடையும் பேட்டிங் ஆர்டரை பயிற்சியாளரான கம்பீர் மாற்றலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்