#IPL2022: வெற்றிப்பாதையை தொடருமா ஹைதராபாத்? இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. DY பட்டில் மைதானத்தில் இன்று மதியம் 3:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் 18 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் ஹைதராபாத் அணி 12 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. அதேபோல ஹைதராபாத் அணியும் 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் சமமான பலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
பஞ்சாப் அணியை பொறுத்தளவில் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவான் சிறப்பான பார்மில் உள்ளனர். அவர்களைதொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன், பைர்ஸ்டோ அணியின் பேட்டிங் வரிசையில் நம்பிக்கை அளித்து வருகின்றனர். பந்துவீச்சில் ரபாடா, அரோரா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர் சிறப்பாக விளங்குகின்றனர்.
எதிர்பார்க்கப்படும் XI:
மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஓடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வைபவ் அரோரா ஆகிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் அணி:
ஹைதராபாத் அணியை பொறுத்தளவில், தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் சற்று சொதப்பினாலும், மீடில் ஆடரில் ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன், மார்க் ராம் அதிரடியாக ஆடி வர, பந்துவீச்சில் நடராஜன், புவனேஷ்வர் குமார், ஜேன்சன், உம்ரான் மாலிக் மிரட்டி வருகின்றனர்.
எதிர்பார்க்கப்படும் XI:
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், ஜே சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், நடராஜன் ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.