#IPL2022: ஹட்-ட்ரிக் தோல்வியில் இருந்து தப்புமா டெல்லி கேபிட்டல்ஸ் அணி?

Published by
Surya

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 19-வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் 3:30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் கொல்கத்தா அணி 16 போட்டிகளிலும், டெல்லி அணி 13 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி கொல்கத்தா அணி, 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி, 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல டெல்லி அணி, 3 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. டெல்லி அணி, தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எதிர்பார்க்கப்படும் XI:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

அஜிங்க்ய ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்ரவர்த்தி ஆகிய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

டெல்லி கேபிட்டல்ஸ்:

ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்ப்ராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், அன்ரிச் நோர்ட்ஜே ஆகிய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

Recent Posts

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

19 minutes ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

9 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

11 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

12 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

13 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

14 hours ago