#IPL2022: ஹட்-ட்ரிக் வெற்றியை பதிவு செய்து முதலிடத்தை தக்கவைக்குமா ராஜஸ்தான்?

Published by
Surya

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 13-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. இதில் பெங்களூர் அணி 12 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதிரடியாக ஆடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் அணி, இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பேட்டிங் வரிசை, பவுலிங் வரிசை என இரண்டிலும் பக்க பலமாக உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றால் ஹட்-ட்ரிக் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ளும்.

எதிர்பார்க்கப்படும் XI:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் \ விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஃபாப் தலைமையிலான பெங்களூர் அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபார பந்துவீச்சின் காரணமாக பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது. அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாம் போட்டியில் 205 ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்தது. இன்று ரணஸ்தன் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய போட்டி பெங்களூர் அணிக்கு முக்கியமான போட்டியாகும்.

எதிர்பார்க்கப்படும் XI:

ஃபாப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

Recent Posts

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

30 minutes ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

35 minutes ago

திருவாதிரை ஸ்பெஷல் ஏழு காய் கூட்டு செய்வது எப்படி.?

சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…

41 minutes ago

HMPV வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?

HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…

52 minutes ago

பொங்கல் தொகுப்பு பெறுபவர்களே… நாளை ரேஷன் கடைகள் செயல்படும்!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…

1 hour ago

நாளை தொடங்கவிருக்கும் கார் ரேஸ்… சீறி பாய தயாராகும் அஜித் குமார்!

துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…

1 hour ago