ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 13-ம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, சென்னையில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 13-ம் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை-டெல்லி அணிகள், இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நோ் மோதியுள்ளது. இதில் மும்பை அணி 16 போட்டிகளிலும், டெல்லி அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடப்பு சீசனில் இரு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டி சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது. தொடக்கத்தில் ரோஹித், டி காக் நல்ல தொடக்கத்தை கொடுத்து வரும் நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கும் சூா்யகுமாா் யாதவ், இஷான் கிஷண், கிரன் பொல்லாா்ட், ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடவேண்டிய நிலையில் உள்ளனர். ராகுல் சாஹர், போல்ட், பும்ரா ஆகியோர் அதிரடியாக பந்துவீசும் நிலையில், ஹர்திக் பாண்டியாவின் பீல்டிங், அணிக்கு பெரிய பலமாக உள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி:
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகா் தவன் அதிரடி பாா்மில் இருந்து வருகிறார். இது அந்த அணிக்கு பலமாக இருக்கிறது. அவரைதொடர்ந்து களமிறங்கிய பிருத்வி ஷா, இன்னும் சிறப்பாக ஆடவேண்டிய நிலையில் இருக்கின்றார். அவரைதொடர்ந்து களமிறங்கும் ஸ்மித், நிதானமாக ஆடிவரும் நிலையில், அவருக்கு பத்தில் ரஹானேவை களமிறக்க வாய்ப்புள்ளது.
அவரையடுத்து களமிறங்கும் ரிஷப் பந்த் சிறப்பாக ஆடிவருகிறார். ஆல்-ரவுண்டா்கள் வரிசையில் ஸ்டாய்னிஸ், லலித் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் நிலையில், ரபாடா, வோக்ஸின் அதிரடி பந்துவீச்சு, எதிரணியை திணறவைக்கும் நிலையில், சுழற்பந்துவீச்சில் அமித் மிஸ்ரா, அஸ்வின், துபே கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…