கூட்டணியில் 142 ரன்கள் குவித்த முஷ்பிகுர் , ஷாகிப் !
நேற்றைய ஐந்தாவது உலக கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணி மோதியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
இறுதியாக பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தனர். உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர்கள் கூட்டணியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முஷ்பிகுர் , ஷாகிப் இடம் பெற்றனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முஷ்பிகுர் , ஷாகிப் இருவரின் கூட்டணியில் 142 ரன்கள் குவித்தனர்.மேலும் இப்போட்டியில் முஷ்பிகுர் 78 ரன்கள், ஷாகிப் 75 ரன்கள் குவித்தனர்.
142* – Mushfiqur/Shakib vs SA, 2019
141 – Mahmudullah/Mushfiqur vs ENG 2015
139 – Mahmudullah/Tamim vs SCO, 2015