சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித் மார்டின் கப்டில்! முக்கிய பொறுப்பு கொடுக்கும் நிர்வாகம்?

மார்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து ரசிகர்கள் அவருடைய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து அவருடைய அடுத்தகட்ட வாழ்க்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

martin guptill

நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடைசியாக அக்டோபர் 2022 இல் நியூசிலாந்துக்காக விளையாடினார். அதனை தொடர்ந்து எந்த போட்டியிலும் விளையாடாத மார்டின் கப்டில் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார்.

சம்பவம் & சாதனை 

மார்டின் கப்டில் பெயரை கேட்டாலே மறக்கவே முடியாத ஒரு சம்பவம் தான் நம்மளுடைய நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால், 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய ரசிகர்கள் பரபரப்பாக போட்டியை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் தோனியை ரன் அவுட் செய்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து பிரபலமாகிவிட்டார்.

சாதனை : 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் 237 * ரன்கள் விளாசி ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஓய்வு பெற்றது குறித்து மார்டின் கப்டில் பேசுகையில் ” நான் என்னுடைய சிறிய வயதிலிருந்தே கண்ட கனவுகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று யோசித்தது தான் அதிகம். அந்த கனவுக்கு நிறைவேறி அணிக்காக 367 போட்டிகள் விளையாடியதற்கு நான் அதிர்ஷ்டம் நிறைந்தவனாக உணர்கிறேன். நியூசிலாந்து அணியின் சீறுடையில் சிறந்த வீரர்களுடன் விளையாடியதை மறக்க மாட்டேன். எனது யு-19 பயிற்சியாளர் மார்க் ஓ’டொன்னெலுக்கு எனது சிறப்பான நன்றி” என கூறினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் தனது மனைவிக்கு நன்றி தெரிவித்தும் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு மிகப்பெரிய ஆதரவாளராக இருந்த என்னுடைய மனைவி லாராவுக்கு நான் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய குடும்பத்திற்காக என்னுடைய மனைவி நிறையவே தியாகம் செய்து இருக்கிறார்” எனவும் எமோஷனலாக மார்டின் கப்டில் பேசினார்.

கப்டில் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து அவருக்கு அணி நிர்வாகம் பயிற்சியாளர் வாய்ப்பு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும், கப்டில் ஒருநாள் போட்டிகளில் 7,346 ரன்கள் மற்றும் டி20 போட்டிகளில் 3,531 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pahalgam terror attack
mayonnaise
Rajnath Singh terrorist attack
pat cummins about srh
PahalgamTerroristAttack pm modi
SRH vs MI - IPL 2025