எம்.எஸ்.தோனிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு மற்றும் ஆரவாரம் பற்றி லக்னோ அணி பவுலர் மார்க் வுட் நெகிழ்ந்து கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், கடந்த 3ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் 20 வது ஓவரில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கியதும், ஸ்டேடியம் முழுவதும் அவருக்கு ஆரவாரம் செய்தனர். தோனி கடைசி ஓவரில், தான் விளையாடிய முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர்களை அடித்து மாஸ் காட்டினார். ஆனால், 3-வது பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து அவுட் ஆனார்.
இந்நிலையில், கடைசி ஓவரை வீசிய, மார்க் வுட், தோனியின் ஆட்டத்தையும் அவரது ரசிகர்கள் உறச்சாகத்தை கண்டு வியந்தார். போட்டி முடிந்த பின் பேசிய மார்க் வுட், தோனி பேட்டிங் செய்ய வரும் போதும், 2 சிக்ஸர்களை அடித்த போதும் எழுந்த ஆரவாரம் தான், நான் இதுவரை மைதானத்தில் கேட்டதிலேயே அதிகப்படியான ஆரவாரம் என்று புகழாரம் சூட்டினார்.
முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ அணிக்IPL2023கு எதிரான போட்டியில், லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…