இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்டில் மார்க் வூட் இல்லை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் வெற்றி பெற்றதால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Wishing you a speedy recovery, @MAWood33! ????
???????????????????????????? #ENGvIND ????????
— England Cricket (@englandcricket) August 23, 2021
அதில், 3வது டெஸ்டில் மார்க் உட் விளையாடமாட்டார் எனவும், 2-வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மார்க் உட் காயமடைந்தார். 3-வது டெஸ்ட் போட்டி முடிவில் மார்க் வூட் உடல் திறன் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் காயங்கள் காரணமாக தொடரில் விளையாடவில்லை. சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் தனது மன நலனில் கவனம் செலுத்த காலவரையற்ற இடைவெளியை எடுத்து கொண்டார். தற்போது இங்கிலாந்து அணியில் மார்க் வூட் விளையாட வீரர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளார்.