இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!

Published by
பால முருகன்

Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 7- வது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக அணியின் கேப்டன் சி தான் சரியில்லை என நெட்டிசன்கள் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியவை விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி இப்படியே கேப்டன் சி இருந்தால் மும்பை அணி பிளே ஆஃப் போகமுடியாது என்பது போல விமர்சித்து பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” மும்பை அணி இந்த சீசன் ரொம்பவே மெதுவாக விளையாடி வருகிறது. என்னை பொறுத்தவரை அணியில் நிறையவே தவறுகள் இருக்கிறது.

இந்த மாதிரியான ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி தொடர்ந்தால், மும்பை பிளேஆஃப்களுக்குச் செல்ல கூட வாய்ப்பு இருக்காது. ரோஹித் சர்மா இதற்கு முன்னதாக கேப்டனாக இருந்த போது அவருடன் வீரர்கள் இருந்தார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியா கேப்டனாக ஆன பிறகு அவரை மும்பை வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லயோ என்று எண்ணம் எனக்கு வருகிறது.

உங்களுடைய அணியில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு பெரிய பந்துவீச்சாளரை வைத்து இருக்கிறீர்கள். பிறகு என்ன காரணத்துக்காக அவரை முதல் ஓவரில் பந்து வீச விட மாட்டீகிறீர்கள்? ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா முதல் ஓவரில் பந்து வீசியது ஆச்சரியமாக இருந்தது.

இந்த போட்டிக்கு முன்னதாக பட்லர் சதம் அடித்தார், ஜெய்ஸ்வால் சிறந்த ஃபார்மில் இல்லை, இப்படி இருக்கையில் உங்களுடைய அணியில் வைத்து இருக்கும் சிறப்பான  ஜஸ்பிரித் பும்ராவுக்கு நீங்கள் முன்னாடியே வாய்ப்பே கொடுத்தால் நன்றாக இருந்து இருக்கும். மும்பை அணி புள்ளி விவர பட்டியலில் முன்னுக்கு செல்வதை என்னால் இன்னும் பார்க்கவே முடியவில்லை தவறுகளை எல்லாம் சரி செய்துவிட்டு சரியாக விளையாடுங்கள்” எனவும் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ”ஷைன் டாம் சாக்கோ” கைது.!

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…

5 minutes ago

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

2 hours ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

2 hours ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

3 hours ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

3 hours ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

3 hours ago