இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 7- வது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக அணியின் கேப்டன் சி தான் சரியில்லை என நெட்டிசன்கள் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியவை விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி இப்படியே கேப்டன் சி இருந்தால் மும்பை அணி பிளே ஆஃப் போகமுடியாது என்பது போல விமர்சித்து பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” மும்பை அணி இந்த சீசன் ரொம்பவே மெதுவாக விளையாடி வருகிறது. என்னை பொறுத்தவரை அணியில் நிறையவே தவறுகள் இருக்கிறது.
இந்த மாதிரியான ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி தொடர்ந்தால், மும்பை பிளேஆஃப்களுக்குச் செல்ல கூட வாய்ப்பு இருக்காது. ரோஹித் சர்மா இதற்கு முன்னதாக கேப்டனாக இருந்த போது அவருடன் வீரர்கள் இருந்தார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியா கேப்டனாக ஆன பிறகு அவரை மும்பை வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லயோ என்று எண்ணம் எனக்கு வருகிறது.
உங்களுடைய அணியில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு பெரிய பந்துவீச்சாளரை வைத்து இருக்கிறீர்கள். பிறகு என்ன காரணத்துக்காக அவரை முதல் ஓவரில் பந்து வீச விட மாட்டீகிறீர்கள்? ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா முதல் ஓவரில் பந்து வீசியது ஆச்சரியமாக இருந்தது.
இந்த போட்டிக்கு முன்னதாக பட்லர் சதம் அடித்தார், ஜெய்ஸ்வால் சிறந்த ஃபார்மில் இல்லை, இப்படி இருக்கையில் உங்களுடைய அணியில் வைத்து இருக்கும் சிறப்பான ஜஸ்பிரித் பும்ராவுக்கு நீங்கள் முன்னாடியே வாய்ப்பே கொடுத்தால் நன்றாக இருந்து இருக்கும். மும்பை அணி புள்ளி விவர பட்டியலில் முன்னுக்கு செல்வதை என்னால் இன்னும் பார்க்கவே முடியவில்லை தவறுகளை எல்லாம் சரி செய்துவிட்டு சரியாக விளையாடுங்கள்” எனவும் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.