ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் இன்று 23-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்,
ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆனால் வழக்கம்போல ஆட்டம் தொடக்கத்திலே ஜானி பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டை இழந்தார். 7 ரன்னில் சாம் கரண் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தபோது தீபக் சாஹரிடம் கேட்சை கொடுத்தார்.
அடுத்து மனீஷ் பாண்டே களமிறங்கினர். பின்னர், மனீஷ் பாண்டே , டேவிட் வார்னர் இருவரும் கூட்டணி அமைத்தனர். அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர். இவர்கள் இருவரின் கூட்டணியை பிரிக்கமுடியாமல் இருந்தபோது லுங்கி நிகிடி ஓவரில் டேவிட் வார்னர் ஜடேஜாவிடமும் , மனீஷ் பாண்டே டு பிளெசிஸிடம் விக்கெட்டை கொடுத்தனர்.
டேவிட் வார்னர் 57, மனீஷ் பாண்டே 61 ரன்கள் எடுத்தனர். டேவிட் வார்னர் இப்போட்டியில் அரைசதம் அடித்த நிலையில், இதுவரை டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் 50 அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 26* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். 172 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…