கோப்பையை வென்ற கையுடன் தமிழ் நடிகையை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்

பெங்களூரை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனிஷ் பாண்டே .இவர் இந்திய அணிக்காக 23 ஒரு நாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரும் அஷ்ரிதா ஷெட்டியும் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.இவர் தமிழில் உதயம் NH4 , ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இவர்கள் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மனிஷ் பாண்டே சையத் முஷ்டக் அலி டிராபி தொடரில் கர்நாடக அணியை தலைமை தாங்கி விளையாடி வந்தார்.இவரது தலைமையில்நேற்று விளையாடிய கர்நாடக அணி இறுதிப் போட்டியில், தமிழகத்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கோப்பையை வென்ற கையுடன் மனிஷ் பாண்டே இன்று நடிகையும் ,அவரது காதலியான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்துள்ளார்.